‘மோகினி’ பேயாக மாறும் ‘நாயகி’ த்ரிஷா!

‘மோகினி’ பேயாக மாறும் ‘நாயகி’ த்ரிஷா!

செய்திகள் 28-May-2016 10:02 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ்சினிமாவில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருக்கும் த்ரிஷாவின் 50வது படம் ‘நாயகி’. அரண்மனை 2, நாயகி படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக புதிய பேய் படம் ஒன்றில் நடிக்கிறார் த்ரிஷா. ‘மோகினி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘சிங்கம் 2’ படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆர்.மாதேஷ் இயக்குகிறார். விஜய்யின் மதுர, பிரசாந்தின் ‘சாக்லேட்’ உட்பட பல படங்களை இயக்கியவர் ஆர்.மாதேஷ்.

சுகன்யா, கௌசல்யா, முகேஷ் திவாரி, யோகி பாபு, சாமிநாதன், ஆர்த்தி கணேஷ் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கும் ‘மோகினி’ படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.

இதன் படபிடிப்பு ஜூன் 2 ஆம் தேதி முதல் லண்டனில் ஆரம்பமாகிறது தொடர்ந்து 40 நடைபெறுகிறது. அதன் பிறகு இந்தியாவில் 20 நாட்களும், பாங்காகில் 10 நாட்களும், பின்னர் மெக்சிகோவிலும் நடைபெறும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;