பாலுமகேந்திரா மாணவன் கதாநாயகனாக நடிக்கும் படம்!

பாலுமகேந்திரா மாணவன் கதாநாயகனாக நடிக்கும் படம்!

செய்திகள் 28-May-2016 9:54 AM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் சத்ய சரவணா இயக்கத்தில் புதுமுகங்கள் திரு, சசி ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘மஞ்சள். ஒரு குடிக்கார குடும்ப தலைவனால் அவரது குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை மைய கருவாக வைத்து காதல், காமெடி என ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்டுள்ள படமாம் ‘மஞ்சள்’. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் திரு, மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் ராஜ்கபூர், ஷண்முக ராஜன், தவசி, ஜெயசூர்யா, பூவிதா, சம்பத் ராம் என பலர் நடித்துள்ள இப்படத்தை ‘DAWN CREATIONS’ என்ற நிறுவனம் சார்பில் கணேஷ், சுரேஷ் இருவர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு செல்வ நம்பி இசை அமைத்துள்ளார். சதீஷ் குமார் இசை அமைத்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள ‘மஞ்சள்’ திரைப்படத்தை மிக விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அட்ரா மச்சான் விசிலு - டிரைலர்


;