பத்துக்கும் மேற்பட்ட காமெடி நடிகர்கள் இணையும் படம்!

பத்துக்கும் மேற்பட்ட காமெடி நடிகர்கள் இணையும் படம்!

செய்திகள் 27-May-2016 8:15 PM IST Top 10 கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் பி.எஸ்.விஜய் இயக்கியுள்ள படம் ‘ககக போ’ (கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க). எ.என்.எஸ்.மூவி புரொடக்‌ஷன் நிறுவனம் சார்பாக டாக்டர் செல்வி சங்கர் தயாரித்துள்ள இப்படத்திற்கு தீனா, பி.சி.சிவம், ஹமாரா சி.வி. ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கதையின் நாயகியாக சாக்‌ஷி, நடிக்க இவருடன் கருணாஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், சுப்பு பஞ்சு, சிங்கம் புலி, மதன் பாப், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், ஆதவன், நிரோஷா என பத்துக்கும் மேற்பட்ட காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. ‘ககக போ’ பாடல் சிடியை ‘அன்பு பிக்சர்ஸ்’ அதிபரும், சட்டசபை உறுப்பினருமான ஜெ.அன்பழகன் வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார். இப்படத்தின் விநியோக உரிமையை ‘ஸ்ரீ தேவர் பிக்சர்ஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜெயிக்கிற குதிர - டிரைலர்


;