விக்ரம் பிரபு பட சென்சார் ரிசல்ட்?

விக்ரம் பிரபு பட சென்சார் ரிசல்ட்?

செய்திகள் 27-May-2016 2:06 PM IST VRC கருத்துக்கள்

ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கியுள்ள படம் ‘வாகா’. இப்படத்தில் கதையின் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்க, கதாநாயகியாக ரைனா ராவ் நடித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை காஷ்மீர் மற்றும் இந்திய பாகிஸ்தான் எல்லையில் படமாக்கப்பட்டுள்ளது. டி.இமான் இசை அமைக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. ரிலீசுக்கு தயாராகி வரும் இப்படத்தின் சென்சார் பணிகள் முடிந்து விட்டது. தணிக்கை குழுவினர் ‘வாகா’வுக்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். அனைவரும் பார்க்க கூடிய படம் என்ற வகையில் ‘வாகா’வுக்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் கிடைத்திருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ‘வாகா’ குழுவினர். ‘விஜய பார்கவி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் பால விஸ்வநாதன் தயாரித்துள்ள இப்படம் விக்ரம் பிரபுவின் கேரியரில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று கூறியுள்ளார் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பாக்கி முனை டீஸர்


;