‘பிச்சைக்கார’னை தொடர்ந்து இறைவி!

‘பிச்சைக்கார’னை தொடர்ந்து இறைவி!

செய்திகள் 27-May-2016 1:39 PM IST VRC கருத்துக்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, ராதாரவி,, அஞ்சலி, கமாலினி முகர்ஜி முதலானோர் நடித்துள்ள ‘இறைவி’ திரைப்படம் அடுத்த மாதம் (ஜூன்) 3-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், அபி&அபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘இறைவி’ யின் விநியோக உரிமையை கே.ஆர்.ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் கைபற்றியுள்ளது. சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ படத்தை கே.ஆர்.ஃபிலிம்ஸ் தான் தமிழகம் முழுக்க விநியோகம் செய்தது! ‘பிச்சைக்காரன்’ இந்நிறுவனத்தின் முதல் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது. ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து இப்போது பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் கார்த்திக் சுப்பராஜின் ‘இறைவி’யை வெளியிடவிருக்கும் கே.ஆர்.ஃபிலிம்ஸுடன், ‘AREA 78’ என்ற நிறுவனமும் விநியோகத்தில் கை கோர்த்துள்ளது. நேற்று சென்னையில் நடந்த ‘இறைவி’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் ‘AREA 78’ நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. ‘AREA 78’ நிறுவனம் தொடர்ந்து திரைப்படங்களை விநியோகம் செய்யவிருப்பதோடு, திரைப்பட தயாரிப்பிலும் களமிறங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;