‘‘தலைப்புகள் தாமாக அமைகின்றன!’’ - விஜய் ஆண்டனி

‘‘தலைப்புகள் தாமாக அமைகின்றன!’’ - விஜய் ஆண்டனி

செய்திகள் 26-May-2016 5:21 PM IST Chandru கருத்துக்கள்

‘நான்', 'சலீம்', 'இந்திய பாகிஸ்தான்' படங்களைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் ஹிட்டாகியுள்ளதால் விஜய் ஆண்டனி உற்சாகத்தின் உச்சத்திலிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குனர் பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கும் ‘சைத்தான்’ படத்தில் விஜய் ஆண்டனி சாப்ட்வேர் இன்ஜினியராக நடிக்கிறார். மேலும் அருந்ததி நாயர், பைக் பந்தயங்களில் கலக்கி கொண்டிருக்கும் அலிஷா அப்துலா மற்றும் மீரா கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளிவந்த ‘சைத்தான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.

பிச்சைக்காரன், சைத்தான் படங்களைத் தொடர்ந்து ‘எமன்’ என்ற படத்திலும் நடிக்கவிருக்கிறார் விஜய்ஆண்டனி. தலைப்புகள் வித்தியாசமாக அமைவது பற்றி குறிப்பிட்ட விஜய்ஆண்டனி...

‘‘படத்திற்கு படம் என்னுடைய தோற்றத்தில் கவனம் செலுத்துவதை விட, எப்படி வலுவான திரைக்கதையை கொண்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்வது என்பதில் தான் நான் அதிக நாட்டம் செலுத்தி வருகிறேன். என்னை பொறுத்தவரை கதையை விட கதையின் கரு தான் ஒரு படத்தின் வெற்றியை நிர்ணைக்கும். அந்த வகையில் நான் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த 'சைத்தான்' திரைப்படம், கண்டிப்பாக மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு அனைத்து வகையிலும் இருக்கும் என நம்புகிறேன். இந்த படத்தின் இயக்குனர் பிரதி கிருஷ்ணமூர்த்தி, ஒரு அறிமுக இயக்குனர் போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்த இயக்குனராக செயல்பட்டுள்ளது படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. என் படங்களுக்கு எதிர்மறையான தலைப்புகளை நான் தேர்வு செய்யவில்லை. அவை அனைத்தும் தாமாகவே அமைகின்றன!’’ என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;