பாபி சிம்ஹா வில்லனாக மிரட்டும் படம்!

பாபி சிம்ஹா வில்லனாக மிரட்டும் படம்!

செய்திகள் 26-May-2016 11:42 AM IST VRC கருத்துக்கள்

ஹாரர் பட வரிசையில் நாளை மறுநாள் (மே-27) ரிலீசாகவிருக்கிற படம் ‘மீரா ஜாக்கிரதை’. மனித சக்திக்கு அப்பார்பட்டு அமானுஷ்யசக்தி பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுக்க நிலவி வருகின்றன. அது பற்றி கேள்விகளும் ஆராய்ச்சிகளும் உலகமெங்கும் தொடர்கின்றன. ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அமானுஷ்ய சக்தி நடமாடுகிறது. அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து படமெடுக்க இளைஞர் குழு ஒன்று புறப்படுகிறது. அவர்களுக்கு நேரும் அனுபவங்களை பரபரப்பாக சொல்லும் படம் தான் ‘மீரா ஜாக்கிரதை’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் ஆர்.ஜி.கேசவன். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர்! சினிமா ஆர்வத்தால் யாரிடமும் பணி புரியாமலேயே இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘ஒயிட் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட்’ சார்பில் எம்.அந்தோனி எட்வர்டு தயாரித்துள்ள இப்படத்தின் கதையை இயக்குனர் வசந்தபாலனிடம் பணிபுரிந்த மகேஷ்வரன் எழுதியுள்ளார். இப்படத்தில் மீரா எனும் கதாபாத்திரத்தில் ‘அழகி’, ‘சிலந்தி’ போன்ற படங்களில் நடித்த மோனிகா நடித்துள்ளார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவிடம் உதவியாளாராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற வீரமணி ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் இசை அமைத்துள்ளார். ‘மீரா ஜாக்கிரதை’ படத்தை ஜெனிசிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழகம் முழுக்க வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாமி 2 ட்ரைலர்


;