மறு வெளியீட்டில் ஜெயிப்பாரா ஹரிகுமார்?

மறு வெளியீட்டில் ஜெயிப்பாரா ஹரிகுமார்?

செய்திகள் 26-May-2016 11:42 AM IST VRC கருத்துக்கள்

‘தூத்துக்குடி’, ‘மதுரை சம்பவம்’, ‘போடி நாயக்கனூர் கணேசன்’, ‘திருத்தம்’ போன்ற படங்களில் நடித்த ஹரிகுமார் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் ‘காதல் அகதீ’. ராமய்யா சினி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஹரிகுமாருக்கு ஜோடியாக ஆயிஷா நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக மம்தா ராவத் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், தேவதர்ஷினி, சிங்கமுத்து, ‘லொள்ளு சபா’ மனோகர், பிளாக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ஷாமி திருமலை படம் குறித்து பேசும்போது, ‘‘இப்படத்தை சில நாட்களுக்கு முன் சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் சரியான திரையரங்குகள் அமையாததாலும், கால சூழ்நிலை சரியாக அமையாததாலும் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இருந்து படத்தை திரும்ப பெற்றோம். தற்பொழுது 100-க்கும் மேற்பட்ட நல்ல தியேட்டர்களில் மறு வெளியிட்டு செய்கிறோம்! ஹரிகுமார் இப்படத்தில் சத்யா என்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரே கதாபாத்திரம் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஹரிகுமாரின் வித்தியாசமான வில்லன் வேடத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வர்வேற்பு கிடைக்கும்’’ என்றார். இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஷியாம் ராஜ் கவனிக்க, பர்ஹான் ரோஷன் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;