சமீபத்தில் காலமான திரையுலக ஜாம்பவான் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் படத்திறப்பு விழா ரஷ்யன் கல்சுரல் செண்டரில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், விஷால் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் நடிகர் விஷால் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு மரியாதை செய்யும் வகையில் இரண்டு மாணவிகளை அவர் பெயரில் படிக்க வைக்கிறேன் என்று கூறி இருந்தார். அவர் அன்று கூறியது போல் நேற்று விஷால் அமரர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் இரண்டு மாணவிகளின் கல்லூரி படிப்பு செலவை ஏற்றார். இது சம்பந்தமான நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது,. இந்நிகழ்ச்சியில் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் மகனும், சினிமா மக்கள் தொடர்பாளருமான டைமண்ட் பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நாஞ்சில் நளினி நேற்று சென்னையில் காலமானார்....