‘‘இது நம்ம படம்பா...’’ - சிம்பு படத்தை பாராட்டிய பிரபலம்!

‘‘இது நம்ம படம்பா...’’ - சிம்பு படத்தை பாராட்டிய பிரபலம்!

செய்திகள் 26-May-2016 10:19 AM IST Chandru கருத்துக்கள்

நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது சிம்புவின் ‘இது நம்ம ஆளு’. சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா, ஆன்ட்ரியா ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் தமிழகத்தில் மட்டும் 350க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. அதோடு வெளிநாடுகளிலும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். ‘இது நம்ம ஆளு’ படத்தின் ரசிகர்களின் நாளைய ரிசல்ட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் சிம்பு, அதன் ஒரு முன்னோட்டமாக சிறப்புக்காட்சி ஒன்றை முக்கிய சினிமா பிரபலங்கள் சிலருக்கு போட்டுக் காட்டியுள்ளார். அந்த சிறப்புக் காட்சியில் பங்குபெற்றவர்களில் யுடிவி நிறுவனத்தின் முன்னாள் தென்னிந்திய மேலாளர் தனஞ்செயனும் ஒருவர். இவர் தற்போது ‘BOFTA’ என்ற ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டைத் துவக்கி நடத்தி வருகிறார். ‘இது நம்ம ஆளு’ படம் குறித்து அவர்...

‘‘சிம்பு ஏற்பாடு செய்திருந்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் சிறப்புக்காட்சியை கண்டுகளித்தேன். ‘இது நம்ம படம்பா’ என சொல்லும் அளவுக்கு ரொமான்ஸ் பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். வசனங்கள் மூலமே பெரிதும் சுவாரஸ்யபடுத்தியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். படம் முழுக்க தனது ஒன்லைன் காமெடிகள் மூலம் பெரிதும் கவர்ந்திருக்கிறார் நடிகர் சூரி. படம் முழுக்க ரசிக்க வைத்தது ‘இது நம்ம ஆளு’. குட்ஒர்க் டீம்!’’ என ட்வீட் செய்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;