கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்!

கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்!

செய்திகள் 25-May-2016 5:03 PM IST Chandru கருத்துக்கள்

இன்று (மே 25) நடிகர் கார்த்தியின் பிறந்தநாள். தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ட்விட்டரில் அதிகாரபூர்வமாக இணைந்தார். அதோடு, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகிவரும் ‘காஷ்மோரா’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை வெகு சிறப்பாகக் கொண்டாடினார் படத்தின் நாயகன் கார்த்தி. இந்த விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் கோகுல், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், நாயகி நயன்தாரா உட்பட படத்தில் பணியாற்றி வருபவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் கார்த்தி ரசிகர் மன்றம் சார்பாக சென்னையில் பல இடங்களிலும் நலத்திட்ட உதவிகளும் நடைபெற்றன. சென்னை அரசு பொது மருத்துவனைக்கு 200 போர்வைகள் மற்றும் கார்த்தி ரசிகர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்களின் இரத்ததானம், வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம், திருவான்மியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானம், பாடி கோவிலில் அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகள் அகில இந்திய கார்த்தி மக்கள் நல மன்ற செயலாளர் வீரமணி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;