‘இது நம்ம ஆளு’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

‘இது நம்ம ஆளு’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

முன்னோட்டம் 25-May-2016 12:24 PM IST Chandru கருத்துக்கள்

நீண்டநாள் காத்திருப்பிற்குப் பிறகு, சிம்பு & நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இது நம்ம ஆளு’ படம் வரும் வெள்ளிக்கிழமை உலகமெங்கும் ரிலீஸாகவிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தைப் பார்க்கத் தூண்டும் காரணங்களில் 5 முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்...

1. இப்படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியிருப்பதற்கு முதல் காரணமே சிம்பு & நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்திருப்பதுதான். ‘வல்லவன்’ படத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே ரியல் லைஃபிலும் ‘கெமிஸ்ட்ரி’ தொடர்ந்தது. அதன்பிறகு சிற்சில காரணங்களால் இருவரும் தங்களது காதலை ‘பிரேக் அப்’ செய்தனர். இந்த இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் வருகிறது என்ற காரணமே ஒன்றே போதும், ‘யூத்’களின் படையெடுப்பு ‘இது நம்ம ஆளு’ ஓடும் தியேட்டர்களில் நிகழ்வதற்கு.

2. குழந்தைகளையும், சமூக கருத்துக்களையும் மையமாக வைத்தே படமெடுத்து வந்த பாண்டிராஜ் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம்தான் ‘இது நம்ம ஆளு’. சிம்பு, நயன்தாரா இருவரின் ‘கெமிஸ்ட்ரி’யும் ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கும் என அவரே குறிப்பிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

3. ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் டி.ஆர். குடும்பத்திலிருந்து இன்னொரு பிரபலம் தமிழ்த் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். அவர் குறளரசன். இவரின் இசையில் உருவான பாடல்கள் நிச்சயம் ரசிகர்களை எழுந்து நின்று ஆடவைக்கும். குறிப்பாக, சிம்புவும் தெலுங்கு நாயகி அட சர்மாவும் இணைந்து ஆடியிருக்கும் ‘மாமன் வெயிட்டிங்...’ பாடலுக்கு தியேட்டர்கள் அதிரப்போவது நிச்சயம்.

4. இப்படம் காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தாலும், படம் நெடுக ரசிகர்களை சிரிக்க வைக்கவும் தவறப்போவதில்லை. காரணம் சந்தானம் மற்றும் சூரியின் காமெடிக் கூட்டணி. சந்தானம் இப்படத்தில் ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே தோன்றியிருந்தாலும், அவர் வரும் காட்சிகள் உச்சபட்ச காமெடியாக இருக்குமாம். அதேபோல் முதல்முறையாக சிம்புவுடன் இணைந்திருக்கிறார் சூரி. டீஸர், டிரைலர்களில் சூரியின் காமெடி பெரிதாக எடுபட்டிருப்பதால், படத்தைப் பார்க்கும் ஆவலும் அதிகரித்திருக்கிறது.

5. ரிலீஸ் தள்ளிக்கொண்டே வந்திருந்தாலும், ‘இது நம்ம ஆளு’ படத்திற்கான எதிர்பார்ப்பு எந்தவிதத்திலும் குறையவில்லை என்பதையே, தமிழகத்தில் மட்டும் 350க்கும் அதிகமான தியேட்டர்கள் அப்படத்திற்கு ஒதுப்பட்டிருப்பதிலிருந்தே தெரிகிறது. ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கும் இப்படம் 137 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உருவாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;