நிவின் பாலிக்கு ஜோடியாகும் ‘யு டர்ன்’ கன்னட பட நாயகி!

நிவின் பாலிக்கு ஜோடியாகும் ‘யு டர்ன்’ கன்னட பட நாயகி!

செய்திகள் 25-May-2016 11:42 AM IST Chandru கருத்துக்கள்

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நிவின் பாலி அறிமுகமாகியிருந்தாலும், அவரின் மலையாளப் படங்களான ‘பெங்களூர் டேஸ்’, ‘பிரேமம்’ ஆகிய படங்களின் மூலமே பெரிய வரவேற்பைப் பெற்றார். இப்போது மலையாள திரையுலகின் முன்னணி நாயகர்களில் நிவின் பாலியும் ஒருவர். விரைவில் இவர் நேரடித் தமிழ் படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறாராம்.

கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘உளிதவரு கண்டன்டே’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகவிருக்கும் படத்தில்தான் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம். மிஷ்கினிடம் உதவி இயக்குனராக இருந்த கௌதம் ராமச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த போட் மெக்கானிக்காக நிவின் பாலி நடிப்பதாகக் கூறப்படும் இப்படத்தின் நாயகியாக கன்னட நடிகை ஷரதா ஸ்ரீநாத் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ‘லூசியா’ புகழ் பவன்குமார் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்து, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கன்னட படமான ‘யு டர்ன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் ஷரதா என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, ஏற்கெனவே ‘கோகினூர்’ என்ற மலையாள படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டிரைலர்


;