‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில் ‘வீரசிவாஜி’ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஷாம்லி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷா ஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைக்க, எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார் ரூபன்.
‘வீரசிவாஜி’ படத்திற்கு இமான் இசையில், ரோகேஷ் பாடல் வரிகளில், சிம்பு பாடிய “தாறுமாறு தக்காளி சோறு... என் ஆள பாரு பப்பாளி தோலு...’’ என்ற பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்த பாடலின் படிப்பிடிப்பு ரஷ்யாவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடன அமைப்பில் ஜூன் 1ம் தேதி முதல் படமாக்கப்படவிருக்கிறது.
இறுதிகட்ட வேலைகள் துரிதமாக நடைபெற்று வரும் ‘வீரசிவாஜி’ படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
மணிரத்னம் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடித்து நேற்று வெளியான படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படம்...