‘பிச்சைக்காரன்’ படத்தில் பெரும் தொழிலதிபராகவும், பிச்சைக்காரனாகவும் நடித்த விஜய் ஆண்டனி அடுத்து நடிக்கும் ‘சைத்தான்’ படத்தில் சாஃப்ட்வேர் எஞ்சினீயாராக நடிக்கிறார். ‘பிச்சைக்காரன்’ படத்தில் பிச்சைக்காரன் ‘மேக்-அப்’புக்காக நிறைய மெனக்கெட்ட விஜய் ஆண்டனி ‘சைத்தானி’ல் தனது இயல்பான தோற்றத்தில் நடிக்கிறாராம! படத்திற்கு படம் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனிக்கு பெரிதும் கை கொடுப்பது அவரது கதை தேர்வும், பாத்திர தேர்வும் தான்! ப்ரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கும் ‘சைத்தான்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அருந்ததி நாயர் நடிக்கிறார். விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ தயாரிக்கும் ‘சைத்தானின் இசையையும் விஜய் ஆண்டனியே கவனிக்கிறார். இந்த படம் தவிர ‘யமன்’ என்ற படமும் விஜய் ஆண்டனி நடிப்பில் வளர்ந்து வருகிறது.
‘மீசையை குமுறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடந்து சுந்தர்.சி.யின் ‘ஆவ்னி மூவீஸ்’ நிறுவனம்...
தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நாஞ்சில் நளினி நேற்று சென்னையில் காலமானார்....
‘மீசையை முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடந்து சுந்தர்.சி.யின் ‘ஆவ்னி மூவீஸ்’ நிறுவனம்...