மீண்டும் இணையும் ஆதி, நிக்கி கல்ராணி!

மீண்டும் இணையும் ஆதி, நிக்கி கல்ராணி!

செய்திகள் 25-May-2016 10:37 AM IST VRC கருத்துக்கள்

‘யாகவராயினும் நா காக்கா’ படத்தில் இணைந்து நடித்த ஆதியும், நிக்கி கல்ராணியும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கும் இப்படம் ஃபாண்டசி அட்வெஞ்சர் காமெடி படமாக உருவாகவிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்பத்திற்கு இசை சந்தோஷ் நாராயணனிடம் உதவியாளராக பணிபுரிந்த திபு இசை அமைக்கிறார். முதலில் இப்படத்தின் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டவர் ஷிவதா தானாம்! ஆனால் இப்போது நிக்கி கல்ராணி தேர்வாகியிருக்கிறார். ‘டார்லிங்’, ‘கோ-2’ முதலான படங்களை தொடர்ந்து நிக்கில் கல்ராணி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ளார் நிக்கி கல்ராணி! ஆதி, நிக்கி கல்ராணி மீண்டும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - பாடல் வீடியோ


;