விஷ்ணு விஷாலின் ‘VVV’ படமும், 10-வது பட பொருத்தமும்!

விஷ்ணு விஷாலின் ‘VVV’ படமும், 10-வது பட பொருத்தமும்!

செய்திகள் 24-May-2016 4:20 PM IST VRC கருத்துக்கள்

‘நீர்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் நடித்து வந்த விஷ்ணு விஷால், முதன் முதலாக நடித்திருக்கும் ஒரு முழு நீள கமர்ஷியல் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. அடுத்த மாதம் (ஜூன்) 3-ஆம் தேதி வெளியாகவிருக்கிற இப்படத்தை எழில் இயக்கியிருக்கிறார். எழிலும். விஷ்ணு விஷாலும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படத்திற்கு சத்யா இசை அமைத்துள்ளார். வழக்கமாக எழில் இயக்கும் படங்களுக்கு டி.இமான் தான் இசை அமைப்பார். ஆனால் இப்படத்தின் மூலம் எழிலும், சத்யாவும் முதன் முதலாக இணைந்துள்ளார். இப்படத்தின் மூலம் இணைந்துள்ள விஷ்ணு விஷால், எழில், சத்யா மூவருக்கும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படம் தங்களது 10-ஆவது படமாக அமைந்துள்ளது. இன்று நடந்த இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால் பேசும்போது,

‘‘நீர்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’ என என் மனதுக்கு பிடித்த மாறுபட்ட கதைகளில் தான் இதுவரை நடித்துள்ளேன். முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தில் அல்லது ஒரு ஆக்‌ஷன் கதையில் நான் இது வரை நடித்ததில்லை. எழில் சார் இயக்கத்தில் முதன் முதலாக முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தில் நடித்துள்ளேன். முதலில் இந்த கதையை வேறு ஒரு தயாரிப்பாளர் தான் தயாரிக்கவிருந்தார். ஆனால் அவர் திடீரென்று விலகியதால் இந்த கதை மீதுள்ள நம்பிக்கையில் நான் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆனேன். நடிப்பில் எது எனது 10 ஆவது படம்! தயாரிப்பில் எனக்கு இது முதல் படம்! ஆரம்பத்தில் கிட்டத்தட்ட ஆறு வருட கால போராட்டத்திறிகு பிறகு தான் நடிகன் ஆனேன். முதல் படத்திலிருந்து இதுவரையிலான என்னோட வளர்ச்சியில் மீடியாவை சேர்ந்த அனைவருக்கும் பங்கு உண்டு! ஒரு நடிகன் என்றில்லாமல் இப்படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அதற்கு நீங்கள் எல்லோரும் தந்த ஆதரவு தான்! கடந்த வருடம் என் பிறந்த நாளை உங்களுடன் கொண்டாடி மகிழ்ந்தேன்! அன்றிலிர்நுது எல்லாம் நல்ல படியாக போய் கொண்டிருக்கிறது. எழில் சார் இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் நான் ஒரு தயாரிப்பாளராகவும் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஜூன் 3-ஆம் தேதி இப்படம் ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தை ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் வெளியிடவிருக்கிறது. உங்களுக்கு படம் பிடித்தால் நன்றாக இருக்கிறது என்று எழுதுங்கள்’’ என்றார் விஷ்ணு விஷால்!

சென்சாரில் ‘யு’ சர்டிஃபிக்கெட் வாங்கியுள்ள ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் விஷ்ணு விஷாலுடன் கதாநாயகியாக, போலீஸ் அதிகாரியாக நிக்கில் கல்ராணி நடிக்க, முக்கிய கேரக்டர்களில் சூரி, ரவி மரியா, ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;