‘கபாலி’ ஆடியோ ரிலீஸ் எப்போது? : தாணு புதிய அறிவிப்பு!

‘கபாலி’ ஆடியோ ரிலீஸ் எப்போது? : தாணு புதிய அறிவிப்பு!

செய்திகள் 24-May-2016 12:02 PM IST Chandru கருத்துக்கள்

1 கோடியே 94 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்ட ‘கபாலி’ டீஸரைத் தொடர்ந்து அதன் முழுநீள டிரைலர் மற்றும் சந்தோஷ் நாராயணின் பாடல்கள் எப்போது வெளியாகும் என தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். ஜூலை 1ஆம் தேதி ‘கபாலி’ உலகமெங்கும் வெளியாகும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், படத்தின் பாடல்கள் வெளியீடு எப்போது என்பது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசிய வீடியோ ஒன்றை தற்போது வெளியாகியிருக்கிறது.

அந்த வீடியோவில் பேசிய தாணு, ‘‘கபாலி படத்தின் ஆடியோ விழாவை ஜூன் 15ஆம் தேதிக்குள் முடித்துவிட வேண்டுமென்ற தாக்கம் இருக்கிறது. அதை நோக்கியே தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் ஜூன் 10க்கும் கண்டிப்பாக அந்த விழா, எல்லோரும் சந்தோஷப்படும் அளவுக்கு பெரிய விழாவாக நடைபெறும்!’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;