அந்தமானில் ஜெயம்ரவி - விஜய்யின் அதிரடி ஆக்ஷன்?

அந்தமானில் ஜெயம்ரவி - விஜய்யின் அதிரடி ஆக்ஷன்?

செய்திகள் 24-May-2016 11:51 AM IST Chandru கருத்துக்கள்

‘ரோமியோ ஜூலியட்’ லக்ஷ்மண் இயக்கத்தில் தற்போது ‘போகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி, தனது 21வது படத்தில் இயக்குனர் விஜய்யுடன் இணைகிறார். அப்படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. இந்நிலையில், அப்படம் குறித்த மேலும் சில தகவல்களும் தற்போது வெளிவந்திருக்கின்றன.

தற்போது விஜய் இயக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவா, தமன்னாவின் ‘அபினேத்ரி’ படத்தை முடித்துவிட்டு ஜெயம் ரவி படத்தை ஆகஸ்ட் முதல் இயக்கவிருக்கிறார். இப்படம் ஆக்ஷன், ரொமான்ஸ் படமாக உருவாகவிருக்கிறதாம். காதல் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையிலும், ஆக்ஷன் பகுதிகளுக்கான படப்பிடிப்பை அந்தமான் தீவிலும் நடத்தவிருக்கிறார்களாம். இப்படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டர், இதுவரை அவர் செய்திராத வகையில் புதுவிதமாக இருக்கும் என்றும் கூறுகிறது விஜய் வட்டாரம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;