தொடரும் திருட்டு விசிடி வேட்டை!

தொடரும் திருட்டு விசிடி வேட்டை!

செய்திகள் 24-May-2016 11:18 AM IST VRC கருத்துக்கள்

தமிழகம் முழுவதும் புதிய திரைப்படங்களின் திருட்டு விசிடிக்கள் தயாரிக்கப்பட்டு விற்பது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. திருட்டு விசிடி விஷயத்தில் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ள விஷால் உள்ளிட்ட சில நடிகர்கள் நேரடியாக களத்தில் இறங்கி திருட்டு விசிடி தயாரிப்பவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர்கள் நந்தா, ரமணா ஆகியோர் தலைமையிலான குழு ஒன்று சேலத்தில் திருட்டு விசிடி தயாரிப்பு நடைபெற்று வருவதை கேள்விப்பட்டு அங்கு வந்தனர். சேலம் பெருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு கடையிலும், எருமைப்பாளையத்திலுள்ள ஒரு இடத்திலும் திருட்டு விசிடி தயாரிக்கப்படுவது கண்டு பிடித்தனர். இது குறித்து திருட்டு விசிடி தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து இரண்டு இடங்களிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது நடிகர் நந்தா, ரமணா ஆகியோரும் இருந்தனர். சோதனை நடக்கும்போது அங்குள்ள டிவிடி பதிவு இயந்திரத்தில் ‘மருது’ படம் பதிவாகி கொண்டிருந்தது. இதையடுத்து திருட்டு விசிடி குடோன் உரிமையாளர் ராம் சந்தலக்கி என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அங்கிருந்து புத்துப்பட சிடிக்கள் 8 மாவட்டங்களுக்கு சப்ளை செய்வது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து திருட்டு விசிடி தயாரிக்க அவர்கள் பயன்படுத்தி வந்த அனைத்து பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இது போன்று திருட்டு விசிடி தயாரிப்பவர்களை கண்டு பிடிக்கும் வேட்டை தொடரும் என்று தெரிவித்துள்ளனர் நடிகர் சங்க நிர்வாகிகள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;