சிம்பு ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ் தந்த ‘AYM’ டீம்!

சிம்பு ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ் தந்த ‘AYM’ டீம்!

செய்திகள் 24-May-2016 11:20 AM IST Chandru கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே இருந்தது. ஒருவழியாக படம் சம்பந்தப்பட்ட அத்தனை சிக்கல்களையும் தீர்த்து தற்போது வரும் 27ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகவிருக்கிறது. இதனால் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் சிம்பு ரசிகர்கள். அவர்களுக்கு மேலும் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள் ‘அச்சம் என்பது மடமையடா’ படக்குழுவினர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அவரின் இசையில் உருவான ‘தள்ளிப்போகாதே...’ படத்தின் லிரிக் வீடியோவை ஜனவரி 16ஆம் தேதி ரிலீஸ் செய்தார்கள். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் இதுவரை 1 கோடி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை இதுவரை பார்க்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்போது இப்படத்தின் இன்னொரு பாடலான ‘ராசாலி...’ என்ற பாடலின் லிரிக் வீடியோவை மே 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்கள்.

இந்த செய்தியை வெளியிட்ட ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘ஒன்ராக என்டர்டெயின்மென்ட்’ தற்போது மேலும் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது. ஆம்... இப்படத்தின் பாடல்களை ஜூன் 17ஆம் தேதி வெளியிடவிருப்பதாகவும், ஜூலை 15ஆம் தேதி படம் உலகமெங்கும் ரிலீஸாகவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் சிம்பு படங்கள் குறித்த அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களால் சந்தோஷ அதிர்ச்சியில் உள்ளனர் எஸ்டிஆர் ரசிகர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;