‘‘இனிமேல் திருமணம் பற்றி பேசாதீர்கள்!’’ - சமந்தா

‘‘இனிமேல் திருமணம் பற்றி பேசாதீர்கள்!’’ - சமந்தா

செய்திகள் 24-May-2016 11:00 AM IST Chandru கருத்துக்கள்

தமிழில் விஜய்யுடன் நடித்த ‘தெறி’, சூர்யாவுடன் நடித்த ‘24’ ஆகிய படங்களோடு தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடித்த ‘பிரம்மோற்சவம்’ என ஒரே நேரத்தில் அவர் நடித்த 3 படங்கள் தியேட்டர்களில் தற்போது ஓடிக்கொண்டிருக்கின்றன. பிரம்மோற்சவம் ரிலீஸுக்குப் பின்னர் சிறிது நாட்கள் தான் ஓய்வெடுக்கவிருப்பதாக சமந்தாவே அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனால் புதிய படங்கள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஓய்வு முடிந்து வந்த பின்னர், ‘யு டர்ன்’ கன்னட படத்தின் தெலுங்கு, தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார் சமந்தா.

இந்நிலையில், இளம் நடிகர் ஒருவரை சமந்தா காதலிப்பதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் தெலுங்கு, தமிழ் இணையதளங்களில் காட்டுத்தீ போல் செய்தி ஒன்று நேற்று பரவியது. இதை நடிகை சமந்தாவே பேட்டி ஒன்றில் தெரிவித்ததாக மேற்கண்ட செய்திகளில் கூறியிருந்ததுதான் பரபரப்புக்கு காரணம். ஆனால், அது வெறும் வதந்தி என்பதை சமந்தா தற்போது தெளிவுபடுத்தியிருக்கிறார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள சமந்தா, ‘‘நானே வாய் திறந்து சொல்லும்வரை எனது திருமணம் பற்றி தயவு செய்து பேசாதீர்கள். நன்றி!’’ என குறிப்பிட்டிருக்கிறார்.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;