தள்ளிப்போன விஷால், தினேஷ் படங்களுக்கு புதிய ரிலீஸ் தேதி?

தள்ளிப்போன விஷால், தினேஷ் படங்களுக்கு புதிய ரிலீஸ் தேதி?

செய்திகள் 24-May-2016 10:34 AM IST VRC கருத்துக்கள்

‘அட்டகத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ் நடித்து அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படம் ஜூன் 3-ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரபூர்வ மாக அறிவித்திருந்தார்கள். ஆனால் இப்போது திடீரென்று ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் ரிலீஸை ஒரு வாரம் தள்ளி வைத்திருக்கிறார்கள். அதாவது ஜூன் 10-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். அதைப் போல விஷால், அஞ்சலி, நடித்து சுந்தர்.சி.இயக்கி, ஏற்கெனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு ரிலீசாகாமல் இருந்து வரும் ‘மதகஜராஜா’ படமும் ஜூன் 10-ஆம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘மதகஜராஜா’ படம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் பேசி முடிக்கப்பட்ட்து என்றும் இப்படம் கண்டிப்பாக ஜூன் 10-ல் ரிலீசாகும் என்றும் இந்த படம் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனல் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ படமும், தினேஷ் நடித்துள்ள ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;