பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’வின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அடுத்த (ஜூன்) மாதம் 9-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தின் பாடல்களை ஜூன் மாதம் இறுதியில் வெளியிடவும், படத்தை செப்டம்பர் 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யவும் முடிவு செய்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘24 AM SUDIOS’ தயாரிக்கும் ‘ரெமோ’வில் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பது செய்கிறார். ஒலி அமைப்பை ‘ஆஸ்கர்’ விருது பெற்ற ரசூல் பூக்குட்டி கவனிக்கிறார். அனிமேஷன் வேலைகளை பிரபல Weta Studios நிறுவனம் கவனிக்கிறது. சிவகார்த்திகேயனுடன் பெரிய டெக்னீஷியன்கள் பலர் இணைந்திருக்கும் ‘ரெமோ’வில் சிவகார்த்திகேயன் 4 கெட்-அப்களில் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படமும் இதே செப்டம்பரில் வெளியிடப்பட்டு வெற்றிவாகை சூடியது குறிப்பிடத்தக்கது. இதனால் ‘ரெமோ’ படமும் சூப்பர்ஹிட் வெற்றியைப் பெறும் என படக்குழுவினர் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.
ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’ நிறுவனமும், கோட்டபடி ராஜேஷின் கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும்...
ரெமோ, சீமராஜா ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ, சீமராஜா முதலான படங்களை தயாரித்த நிறுவனம் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM...