’மருது’ இந்த வாரம் தெலுங்கில் வருது!

’மருது’ இந்த வாரம் தெலுங்கில் வருது!

செய்திகள் 23-May-2016 12:16 PM IST Chandru கருத்துக்கள்

கொம்பன் வெற்றியைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மருது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் திரையரங்குளில் தற்போது ஓடிக்கொண்டிருகிறது. இந்நிலையில் மருதுவின் தெலுங்கு டப்பிங்கான ’ராயுடு’ வருகிற 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில், தமிழில் வெளியான மே 20ஆம் தேதியே, ராயுடுவையும் களமிறக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அன்று மகேஷ்பாபுவின் ‘பிரம்மோற்சவம்’ தெலுங்கு படம் பெரும்பாலான தியேட்டர்களை ஆக்ரமித்துக் கொண்டதால், ராயுடுவுக்கு பெரிய அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், ‘பிரம்மோற்சவம்’ படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால், இந்த வாரம் ‘ராயுடு’ சொல்லிக்கொள்ளும்படியான அளவில் தியேட்டர்களை முன்பதிவு செய்துள்ளார்களாம்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மே 27ஆம் தேதி மிகப்பிரமாண்டமாக ரிலீசாக இருப்பதாக இயக்குநர் முத்தையாவே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;