தொடரும் விக்னேஷ் சிவன், அனிருத் கூட்டணி!

தொடரும் விக்னேஷ் சிவன், அனிருத் கூட்டணி!

செய்திகள் 23-May-2016 11:16 AM IST Chandru கருத்துக்கள்

‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், அப்படத்தில் 3 பாடல்களையும் எழுதி தன்னை ஒரு பாடலாசிரியராகவும் நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து ‘வணக்கம் சென்னை’ படத்தில் முதல்முறையாக அனிருத்துடன் கூட்டணி அமைத்தார் விக்னேஷ் சிவன். இப்படத்தில் சூப்பர்ஹிட்டான ‘எங்கடி பொறந்த’ பாடலை எழுதியவர் விக்னேஷ்தான். அனிருத்துடன் அப்போது ஆரம்பித்த கூட்டணி இப்போது சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

24 ஏஎம் ஸ்டியோஸ் நிறுவனம் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், படத்தின் தீம் மியூசிக்கும் ஜூன் 9ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தில் டைட்டில் பாடலாக இடம்பெறவிருக்கும் இந்த தீம் மியூசிக் பாடலுக்கான வரியை எழுதியிருப்பவர் விக்னேஷ் சிவன். ‘நானும் ரௌடிதான்’ படத்தில் அனிருத் இசையமைப்பில் உருவான மொத்த பாடல்களையும் விக்னேஷ் சிவன்தான் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல், அனிருத் ‘சான்ஸே இல்லை...’, ‘அவளுக்கென்ன’ போன்ற மியூசிக் வீடியோக்களை இயக்கியதும் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;