25 வருடங்களுக்கு பிறகு மோகன்லால், கௌதமி இணையும் படம்!

25 வருடங்களுக்கு பிறகு மோகன்லால், கௌதமி இணையும் படம்!

செய்திகள் 23-May-2016 11:06 AM IST VRC கருத்துக்கள்

மோகன் லாலும், கௌதமியும் இணைந்து நடித்த மலையாள படம் ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’. 1990-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான இப்படத்தை தொடர்ந்து, அதாவது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லாலும் கௌதமியும் மீண்டும் ஒரு படத்தில் இனைந்து நடிக்கிறார்கள். இப்படத்தை தெலுங்கு பட இயக்குனர் சந்திரசேகர் எலட்டி இயக்குகிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் தெலுங்கில் ‘மனமன்தா’ என்ற பெயரிலும், தமிழில் ‘நமது’ என்ற பெயரிலும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை சாய் ஷிவானி வழங்க, வாராஹி சலனசித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் மோகன் லால், கௌதமி ஜோடியுடன் மற்றொல்ரு ஜோடியாக விஸ்வநாத், ஹனிஷா ஆம்ரோஷ் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாசர், ஊர்வசி, சந்திரமோகன் கொல்லப்புடி மாருதி ராவ் ஆகியோரும் நடிக்கும் இப்படத்திற்கு ராகுல் ஸ்ரீவத்சவ் ஒளிப்பதிவு செய்கிறார். மகேஷ் சங்கர் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காப்பான் - டீஸர்


;