மலேசியாவில் ‘கபாலி’ செய்யவிருக்கும் சாதனை!

மலேசியாவில் ‘கபாலி’ செய்யவிருக்கும் சாதனை!

செய்திகள் 23-May-2016 10:57 AM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ‘கபாலி’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இம்மாதம் 30-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது என்று கூறப்படுகிறது. ரம்ஜானை முன்னிட்டு ஜூலை முதல் வாரம் ‘கபாலி’யை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால் இப்படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. உலகம் முழுக்க மிகப் பிரம்மாண்டமான முறையில் வெளியாகவிருக்கும் ‘கபாலி’ படத்தை மலேசியாவில் மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷன் என்ற பட நிறுவனம் மலாய மொழியில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறது. ஒரு தமிழ் படம் மலாயா மொழியில் டப்பிங் செய்து வெளியிடப்படுவது இது தான் முதல் முறையாம்! அந்த சாதைனையை ரஜினியின் கபாலி செய்துள்ளது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’க்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் பெரும் சாதனை படைத்திருப்பது அனைவரும் அறிந்ததே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;