தெலுங்கிலும் வசூலை அள்ளும் பிச்சைக்காரன்!

தெலுங்கிலும் வசூலை அள்ளும் பிச்சைக்காரன்!

செய்திகள் 23-May-2016 9:56 AM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து, தயாரித்து சமீபத்தில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. சசி இயக்கத்த்ல் உருவான இப்படம் நல்ல வசூல் செய்ததோடு, விமர்சன ரீதியாகவும் பேசப்பட்ட படமாகும். இப்படம் சமீபத்தில் தெலுங்கில் ‘பிச்சகாடு’ என்ற பெயரில் வெளியானது. ‘பிச்சைக்காரனு’க்கு தமிழில் கிடைத்த பெரிய வரவேற்பை போலவே தெலுங்கு ‘பிச்சகாடு’வுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்! விஜய் ஆண்டனி நடித்து ஏற்கெனவே தெலுங்கில் வெளியான படங்களை விட இப்படம் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது என்றும், விஜய் ஆண்டனி நடிப்பில் இதற்கு முன் அங்கு வெளியாகிய படங்களை விட இப்படம் வசூலில் பெரும் சாதனை படைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ‘பிச்சைக்காரன்’ படக்குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;