21வது படத்தில் விஜய்யுடன் இணையும் ஜெயம் ரவி!

21வது படத்தில் விஜய்யுடன் இணையும் ஜெயம் ரவி!

செய்திகள் 23-May-2016 9:48 AM IST Chandru கருத்துக்கள்

‘ஜெயம்’ படத்தின் மூலம் தனது அண்ணன் மோகன் ராஜாவால் 2003ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமான ஜெயம் ரவி, கடந்த 13 வருடங்களில் 19 படங்களில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார். கடைசியாக அவரின் நடிப்பில் வெளிவந்த படம் ‘மிருதன்’. அப்படத்தைத் தொடர்ந்து தற்போது, ‘ரோமியோ ஜூலியட்’ லக்ஷ்மண் இயக்கத்தில் ‘போகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி.

இப்படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் அவரது 21வது படத்தை இயக்கவிருப்பவர் இயக்குனர் விஜய். தற்போது தமன்னா ஹீரோயினாக நடிக்கும் ‘அபினேத்ரி’ என்ற ஹாரர் படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இயக்கி வருகிறார் விஜய். ‘போகன்’ படத்தை ஜெயம் ரவியும், ‘அபினேத்ரி’ படத்தை விஜய்யும் முடித்துவிட்டு, தங்களது புதிய படத்தின் வேலைகளில் களமிறங்கவிருக்கிறார்கள். இப்படம் குறித்த மேலும் சில தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிபார்க்கப்படுகிறது.

(இப்படம் தவிர சுசீந்திரன் இயக்கும் ஒரு படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் புதிய படமொன்றிலும் ‘ஜெயம்’ ரவி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;