‘இறைவி’யுடன் மோத வரும் வீரப்பன்!

‘இறைவி’யுடன் மோத வரும் வீரப்பன்!

செய்திகள் 21-May-2016 4:21 PM IST VRC கருத்துக்கள்

தமிழகத்தை உலுக்கிய மாபெரும் கொள்ளையன் வீரப்பன்! இவனது வாழ்க்கை வரலாறை வைத்து பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள படம் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’. தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தில் வீரப்பன் கேரக்டரில் பாலிவுட்டை சேர்ந்த சந்தீப் பரத்வாஜ் நடித்துள்ளார். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியாக உஷா ஜாதவ் நடித்துள்ளார். வீரப்பனை பிடிக்கும் போலீஸ் படையின் தலைவராக சச்சின் ஜோஷி நடித்துள்ளார். இவர்களுடன் பிரபல மாடல் அழகியும், நடிகையுமான ‘லிசாரே’யும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். வரும் 27ஆம் தேதி ஹிந்தியில் ரிலீசாகவிருக்கும் இப்படம் தமிழில் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஜூன் 3-ஆம் தேதி தான் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘இறைவி’, எழில் இயக்கியுள்ள ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ ஆகிய படங்களும் வெளியாகிறது. இந்த படங்களுடன் களமிறங்கவிருக்கும் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ படம் சம்ந்தமான புரொமோஷன் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது அப்போது இயக்குனர் ராம்கோபால் வர்மா பேசும்போது,

‘‘வீரப்பனை மையமாக வைத்து இதற்கு முன் சில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன என்பது எனக்கு தெரியும். வீரப்பன் குறித்து நான் சேகரித்த தகவல்களை வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். எனக்கு கிடைத்த தகவலின் படி வீரப்பன் 97 போலீஸ்காரர்களை கொன்றிருக்கிறான். 900 யானைகளை கொன்று குவித்திருக்கிறான். வீரப்பனை பிடிக்க மட்டும் அரசாங்கம் 734 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது! இப்படி அரசாங்கத்துக்கும், நாட்டு மக்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பனின் கடைசி இரண்டு ஆண்டு காலத்தில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் இதுவரை வெளிவந்த வீரப்பன் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

365 டேஸ் - தெலுங்குப் பட டீஸர்


;