படப்பிடிப்புக்கு திரும்பிய விஜயகாந்த்!

படப்பிடிப்புக்கு திரும்பிய விஜயகாந்த்!

செய்திகள் 21-May-2016 3:06 PM IST VRC கருத்துக்கள்

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றதை தொடர்ந்து நடிகர் விஜயகாந்த் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கி விட்டார். சென்ற நவம்பர் மாதம் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்திற்கான பூஜை நடைபெற்றது. இப்படத்தில் சண்முகபாண்டியனுடன் இன்னொரு கதாநாயகனாக விஜயகாந்தும் நடிக்கிறார். தேர்தலில் போட்டியிடுவதால் அந்த வேலைகளை கவனிக்க வேண்டி இருந்ததால் தேர்தலுக்கு முன் நடிப்பதில்லை என்ற முடிவோடு இருந்தார் விஜயகாந்த். இப்போது தேர்தல் முடிந்ததை தொடர்ந்து பட்த்தில் நடிக்க துவங்கி விட்டார். இது சம்பந்தமான தகவலை நேற்று விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தார். அறிமுக இயக்குனர் அருண் பொன்னம்பலம் இயக்கும் ‘தமிழன் என்று சொல்’ திரைப்படத்தை விஜயகாந்தின் சொந்த பட நிறுவனமன ‘கேப்டன் சினி கிரியேஷன்ஸ்’ தயாரிக்க, ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - கொம்புள கொம்புள பாடல் வீடியோ


;