ஜூன் 6 முதல் தொடரியின் இசை பயணம்

ஜூன் 6 முதல் தொடரியின் இசை பயணம்

செய்திகள் 21-May-2016 11:34 AM IST Chandru கருத்துக்கள்

கும்கி, கயல் என அடுத்தடுத்த வெற்றி படங்களை தந்த பிரபு சாலாமனின் அடுத்த படைப்பு ’தொடரி’. தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவாக நிறைவடைந்திருந்திருந்தாலும் ’போஸ்ட் புரொடக்‌ஷன்’ வேலைகள் சில காரணங்களால் தாமதம் ஆனது. ஆனால் தற்போது படத்தை விரைவில் வெளியிடுவதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் படத்தின் இசை வெளியீடு வருகிற ஜூன் 6ஆம் தேதி நடக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியிருக்கிறது, மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கபடலாம் என எதிர்பாக்கபடுகிறது. டி.இமானின் இசை மற்றும் சுகுமாரின் ஒளிப்பதிவு ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;