தயாரிப்பாளர் நயன்தாராவுடன் இணையும் சிவகார்த்திகேயன்?

தயாரிப்பாளர் நயன்தாராவுடன் இணையும் சிவகார்த்திகேயன்?

செய்திகள் 21-May-2016 10:30 AM IST Chandru கருத்துக்கள்

‘லேடி சூப்பர்ஸ்டார்’ என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தை தயாரிக்கவிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்த செய்தி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாகவும், அந்தப்படத்திற்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என பெயரிடப்பட்டிருப்பதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளிவந்தன. அந்தக்கதையின் நாயகனாகத்தான் தற்போது சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘ரெமோ’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் சிவகார்த்திகேயன் இணைவார் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;