இயக்குனர் ராமின் ‘தரமணி’ டீஸர் ரிலீஸ்?

இயக்குனர் ராமின் ‘தரமணி’ டீஸர் ரிலீஸ்?

செய்திகள் 20-May-2016 11:14 AM IST Top 10 கருத்துக்கள்

கற்றது தமிழ், தங்க மீன்கள் படங்களைத் தொடர்ந்து ராம் இயக்கத்தில் 3வதாக வெளிவரவிருக்கும் படம் ‘தரமணி’. ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பொரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகம் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கிறார். ஆன்ட்ரியா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சிறப்புத் தோற்றமொன்றில் நடிக்கிறார் நடிகை அஞ்சலி. இவர்களுடன் அழகம் பெருமாளும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இசைக்கு யுவன், ஒளிப்பதிவுக்கு தேனி ஈஸ்வர், படத்தொகுப்புக்கு ஸ்ரீகர்பிரசாத் ஆகியோர் கரம்கோர்த்துள்ளனர்.

‘தங்க மீன்கள்’ ரிலீஸிற்கு பின்பு அறிவிக்கப்பட்ட இப்படம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக உருவாகி வருகிறது. படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் இப்படத்தின் டீஸர் நாளை (மே 21) காலை 11 மணியளவில் யு ட்யூப்பில் வெளியாகிறது. தேசிய விருதுபெற்ற பட இயக்குனரின் அடுத்த படைப்பு என்பதால் ‘தரமணி’க்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;