தியேட்டர் களத்தில் விஷால், மகேஷ்பாபு, துல்கர்!

தியேட்டர் களத்தில் விஷால், மகேஷ்பாபு, துல்கர்!

செய்திகள் 20-May-2016 10:18 AM IST Chandru கருத்துக்கள்

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒருவழியாக மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது தமிழகம். அந்தவகையில், வெள்ளிக்கிழமையான இன்று 2 தமிழ்ப் படங்கள் உட்பட 6க்கும் மேற்பட்ட படங்கள் தியேட்டர் களத்தில் ரசிகர்களின் வாக்குகளுக்காக களமிறங்கியிருக்கின்றன.

குட்டிப்புலி, கொம்பன் படங்களுக்குப் பிறகு முத்தையா இயக்கியிருக்கும் 3வது கிராமத்துப்படம் ‘மருது’. விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் இன்றும் தமிழகத்தில் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

தெலுங்கு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் மகேஷ்பாபுவின் ‘பிரம்மோற்சவம்’ படமும் இன்றுதான் ரிலீஸாகிறது. மகேஷ்பாபு, சமந்தா, காஜல், பிரணிதா, சத்யராஜ், ரேவதி, சரண்யா பொன்வண்ணன் என தமிழ் நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஆரம்பிக்கப்பட்டபோது தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறது என அறிவித்திருந்தார்கள். ஆனால், இப்போது தெலுங்கில் மட்டுமே வெளியாகிறது.

துல்கர் சல்மானின் கேரியரில் முக்கிய படமாக பார்க்கப்படம் ‘கம்மாட்டிபாடம்’ மலையாள படம், ஆங்கிலப் பட ரசிகர்களின் ஃபேவரைட் மூவியான ‘எக்ஸ்மென் : அபோகலிப்ஸ்’ ஆகியவையும் இன்றே ரிலீஸாகிறது. அதோடு ‘லூஸியா’ கன்னட படத்தின் மூலம் தென்னிந்தியாவில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படும் பவன்குமாரின் ‘யு டர்ன்’ கன்னட படமும் இன்று வெளியாகிறது. மருது படத்துடன் தமிழில் ‘கத சொல்லப் போறோம்’ என்ற சிறிய பட்ஜெட் படமொன்றும் இன்று ரிலீஸாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;