நடுநிசியில் பேய்க்காமெடியை களமிறக்கிய சந்தானம்!

நடுநிசியில் பேய்க்காமெடியை களமிறக்கிய சந்தானம்!

செய்திகள் 19-May-2016 1:54 PM IST Chandru கருத்துக்கள்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களைத் தொடர்ந்து தற்போது ‘தில்லுக்கு துட்டு’ படத்தில் நடிக்கிறார் சந்தானம். அவருக்கு ஜோடியாக புதுமுகம் ஷனன்யா நடித்திருக்கிறார். தொடர்ந்து ஹாரர் படங்களை வாங்கி வெளியிட்டு வரும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ‘பீட்சா 2 வில்லா’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தீபக்குமார் பதி இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பரபரப்பாக வளர்ந்து வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் நேற்றிரவு 2 மணி அளவில் (அதிகாலை) வெளியிடப்பட்டது. ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. புதிய கெட்அப், ஸ்லிம்மான உடம்பு, டான்ஸ், ஃபைட் என அனைத்து ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் சந்தானம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;