ஜூன் 10 முதல் த்ரிஷாவின் பேயாட்டம்!

ஜூன் 10 முதல் த்ரிஷாவின் பேயாட்டம்!

செய்திகள் 19-May-2016 1:20 PM IST Chandru கருத்துக்கள்

சமீபகாலமாக நாயகிகளை முன்னிலைப்படுத்தியும் கொஞ்சம் தமிழ்ப்படங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. அனுஷ்காவுக்கு ஒரு ‘அருந்ததீ’, நயன்தாராவுக்கு ஒரு ‘மாயா’ வரிசையில், த்ரிஷாவுக்கு ‘நாயகி’ படம் அமையுமா என்பதைப் பொறுந்திருந்து பார்க்க வேண்டும். கதாநாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகிவரும் இப்படம் த்ரிஷாவின் 50வது படம் என்பது கூடுதல் சிறப்பு.

த்ரிஷாவிடம் நீண்டநாள் மேனேஜரான கிரிதர் மாமிடிபல்லி தயாரிக்கும் ‘நாயகி’ படத்தை கோவி இயக்கியுள்ளார். கணேஷ் வெங்கட்ராம், சுஷ்மா ராஜ், ஜெயபிரகாஷ், மனோபாலா, கோவை சரளா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். தனது கேரியரில் முக்கியமான படமாக த்ரிஷா கருதும் ‘நாயகி’ படம் வரும் ஜூன் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாம். இதனால் த்ரிஷாவின் பேயாட்டத்தைக் காண ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;