தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் கேள்வி?

தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் கேள்வி?

செய்திகள் 19-May-2016 11:48 AM IST VRC கருத்துக்கள்

சமீபகாலமாக திருட்டு விசிடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. திருட்டு விசிடி தயாரிப்பில் சில தியேட்டர்களும் உடந்தையாக இருந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான ‘தெறி’, ‘தோழா’, ‘24’, ‘கோ’ உட்பட பல படங்கள் தியேட்டரிலேயே திருடப்பட்டு ‘விசிடி’ யாக வெளிவந்துள்ளது. இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகர் சங்க செயலாளர் விஷால், தயாரிப்பாளர்கள் கே.ஈ.ஞானவேல் ராஜா, ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், எர்லெட் குமார் ஆகியோர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஷால் பேசும்போது,
‘‘திருட்டு விசிடி தயாரிப்பில் பெங்களூர் ஓரியன் மாலில் உள்ள பி.வி.ஆர்.தியேட்டர் உடந்தையாக இருந்து வருகிறது. சமீப காலத்தில் ஆர்யா நடித்த வி.எஸ்.ஓ.பி., இஞ்சி இடுப்பழகி, கார்த்தி நடித்த ‘தோழா’ உட்பட 7 படங்கள் அந்த தியேட்டரில் திருட்டுத்தனமாக படமாக்கப்பட்டு திருட்டு விசிடியாக வெளிவந்துள்ளது. இதற்கு ஆதாரம் இருக்கிறது. இதேபோல சூர்யா நடித்த ‘24’ என்ற படமும் அதே தியேட்டரில் திருட்டுத்தனமாக படமாக்கப்பட்டுள்ளதை ஆதாரபூர்வமாக கண்டு பிடித்துள்ளோம். இது பற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு வார்த்துக்கு முன்னாடி புகார் செய்தோம். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் இந்த விஷயத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நான் நடித்த ‘மருது’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதுவும் திருட்டு விசிடியாக வந்துவிடுமோ என்று பயப்படுகிறேன். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்து ஒரு வாரம் ஆகிய நிலையில் இன்னும் நடவடிக்கை எடுக்காத்தது ஏன் என்று தெரியவில்லை. இந்த பிரச்சனையில் தயாரிப்பாளர் சங்கம் உடனே தலையிட்டு திருட்டு விசிடி தயாரிக்க உடந்தையாக இருந்த அந்த தியேடர் மீது நடவடிகை எடுக்க வேண்டும். இதை நான் நடிகன் என்றில்லாமல் ஒரு தயாரிப்பாளராக வலியுறுத்துகிறேன்’’ என்றார்.

‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா பேசும்போது, ‘‘தமிழ் திரையுலகில் இப்போது 40 தயாரிப்பாளர்கள் தான் படம் தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாளுக்கு நாள் படம் தயாரிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் சினிமா தொழில் முழுவதுமாக அழிந்துவிடும். இந்த தொழிலை நம்பி ஏராளமானோர் இருக்கிறார்கள். எனவே தயாரிப்பாளர் சங்கம் திருட்டு விசிடி விஷயத்தில் உடனடியாக தலையிட்டு ஒரு முடிவு எடுக்க வேண்டும். ‘தெறி’ திருட்டு விசிடி பிரச்சனையில் அதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு சாரும் பாதிக்கப்பட்டுள்ளார். அப்படி இருக்க ஏன தயாரிப்பாளர் சங்கம் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்று தெரியவில்லை. சினிமா தயாரிப்பாளர்களை கப்பாற்றும் விதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இனி சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது, அல்லது சினிமா தயாரிப்பிலிருந்து விலகும் முடிவை எடுக்க வேண்டியது தான். இப்போது தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் தயாரிக்கும் படங்கள் மூலம் 20 சதவிகிதம் மட்டுமே வருமானம் வருகிறது. மீதி 80 சதவிகித வருமானம் திருட்டு விசிடி தயாரிப்பவர்களுக்கு தான் போய் விடுகிறது. இது பற்றி அடுத்து அமையவிருக்கும் புதிய அரசாங்கத்திடம் தயாரிப்பாளர் சங்கம் முறையிட வேண்டும். தயாரிப்பாளர்களை காப்பாற்றும் விதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;