மீண்டும் மிரட்ட வரும் ‘கான்ஜுரிங்’

மீண்டும் மிரட்ட வரும் ‘கான்ஜுரிங்’

செய்திகள் 19-May-2016 11:22 AM IST Chandru கருத்துக்கள்

ஹாலிவுட்டில் ஹாரர் படங்களின் ஆதிக்கம் என்பது எப்போதுமே அதிகமாக இருக்கும். ஆனால், அங்கு வெளிவரும் அத்தனை படங்களும் இங்கே நம்மூர் ரசிகர்களின் பார்வைக்கு வருவதில்லை. அப்படி வெளிவரும் படங்கள் அத்தனையும் வெற்றிபெறுவதும் இல்லை. அப்படியிருக்க, 2013ல் வெளிவந்த ‘தி கான்ஜுரிங்’ ஹாலிவுட் ஹாரர் படம் உலகமெங்கும் பரவலான வரவேற்பைப் பெற்று வசூலில் புதிய சாதனை படைத்தது. அதோடு உலகின் பல நாடுகளிலும் ஹாரர் பட டிரென்ட்டை மீண்டும் உருவாக்கியதும் இப்படம்தான். தமிழ் சினிமாவில்கூட ‘தி கான்ஜுரிங்’ வெற்றிக்குப் பிறகு ஹாரர் படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்துவருகிறது.

இந்நிலையில், ‘தி கான்ஜுரிங்’ படத்தின் 2ஆம் பாகம் தற்போது ரிலீஸாகவிருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய ஜேம்ஸ் வான்தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியிருக்கிறார். உலக அரங்கில் மிக பெரிய வசூலை குவித்த 'Fast & Furious 7' படத்தை இயக்கியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

The Conjuring படத்தில் பேய் ஆராய்ச்சியாளர்ககளாக தோன்றிய Patrick Wilson மற்றும் Vera Farmiga, முறையே Ed Warren மற்றும் Lorraine Warren கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களது ஆராய்ச்சி குறிப்புகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள மற்றொரு கதைதான், இந்த இரண்டாம் பாகம்.

Chad Hayes, Carey W. Hayes, Leslie Johnson மற்றும் இயக்குநர் James Wan ஆகிய் அனைவரும் ஒருங்கிணைந்து திரைக்கதையை அமைத்துள்ளனர். Aascar விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்ட Don Burgess ஒளிப்பதிவு செய்துள்ளார். Joseph Bishara திகில் நிறைந்த இசையை வழங்கியுள்ளார். Kirk Morri படத்தை தொகுத்துள்ளார். Warner Bros. நிறுவனத்தின் படைப்பு இப்படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பூலோகம் - டிரைலர்


;