2 கோடியை நோக்கிப் பாயும் ‘கபாலி’ டீஸர்!

2 கோடியை நோக்கிப் பாயும் ‘கபாலி’ டீஸர்!

செய்திகள் 18-May-2016 1:09 PM IST Chandru கருத்துக்கள்

‘மகிழ்ச்சி’ என்ற ஒற்றை வார்த்தைதான் இப்போதைய தமிழ்சினிமா டிரென்டிங்கில் உச்சத்தில் இருக்கிறது. காரணம் ‘கபாலி’ டீஸர். முக்கியக்காரணம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். ஒரு வார்த்தையையே ‘பஞ்ச்’ டயலாக்காக மாற்றும் சக்தி அவரைத் தவிர வேறு யாருக்கிருக்கிறது. மே 1ஆம் தேதி யு டியூப்பில் வெளியிடப்பட்ட ‘கபாலி’ டீஸர் 1 கோடி பார்வையிடல்களையும், 3 லட்சம் லைக்குகளையும் அதிவிரைவில் பெற்ற டீஸர் என்ற சாதனையைப் படைத்தது.

இப்போது 17 நாட்கள் முடிந்திருக்கும் நிலையில், கபாலி டீஸரை 1 கோடி 83 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதோடு 4 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. விரைவில் 2 கோடி என்ற மைல்கல்லை கபாலி டீஸர் எட்டும். அப்படியிருக்கும் பட்சத்தில், தென்னிந்திய சினிமாவில் 2 கோடி பார்வையிடல்களை எட்டும் முதல் டீஸர் என்ற சாதனையை கபாலி படைக்கும்.

கலைப்புலி தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் கபாலி படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். ஜூலை 1ஆம் தேதி வெளியாகவிருக்கும் கபாலி படத்தின் விநியோக உரிமையை ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;