‘சாட்டை-2’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘சாட்டை-2’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 18-May-2016 12:28 PM IST VRC கருத்துக்கள்

அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரகனி நடித்து வெளிவந்த ‘சாட்டை’, விமர்சன ரீதியாக பேசப்பட்ட படம் என்பதோடு, வணிக ரீதியாகவும் இப்படம் வெற்றிபெற்றது. இந்த படத்தை தயாரித்த ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ ஜான் மேக்ஸ் ‘சாட்டை’யின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். ‘சாட்டை-2’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கிஷோர், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது. அறிமுக இயக்குனர் கௌதம் இயக்கவிருக்கும் ‘சாட்டை-2’வின் துவக்க விழா அடுத்த மாதம் (ஜூன்) நடக்கவிருக்கிறது. ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ தற்போது தயாரித்து வரும் படம் ‘பொட்டு’. வடிவுடையான் இயக்கும் இப்படத்தில் பரத் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ட்ரைலர்


;