மோகன்லால் படத்திற்கு இசை அமைக்கும் சித்தார்த் விபின்!

மோகன்லால் படத்திற்கு இசை அமைக்கும் சித்தார்த் விபின்!

செய்திகள் 18-May-2016 12:14 PM IST VRC கருத்துக்கள்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘நான் பேய் பேசுகிறேன்’ உட்பட பல தமிழ் படங்களுக்கு இசை அமைத்த சித்தார்த் விபின், மோகன்லால் நடிப்பில், மேஜர் ரவி இயக்கும் மலையாள படமொன்றுக்கு இசை அமைக்கிறார். ஏற்கெனவே மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ‘குருக்‌ஷேத்ரா’ என்ற மலையாள படத்திற்கு இசை அமைத்த சித்தார்த் விபின் மீண்டும் இப்படத்தில் மோகன்லால், மேஜர் ரவியுடன் இணைந்து பணியாற்றுகிறார். 1971-ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த போரின் பின்னணியை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் கதையை கொண்ட இப்படத்தில் மோகன்லால் இராணுவ மேஜராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்திய பாகிஸ்தான் எல்லை பிரதேசங்களில் நடக்கவிருக்கிறது. ஏற்கெனவே மோகன் லால் நடிப்பில் இராணுவ பின்னணியில் மேஜர் ரவி இயக்கிய ‘கர்மயோதா’, ‘கீர்த்தி சக்ரா’, (தமிழ்- அரண்), ‘குருக்‌ஷேத்ரா’ ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இப்படத்தையும் இராணுவ பின்னணியில் இயக்கி வருகிறார் மேஜர் ரவி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிரம்மாடாட்காம் - டிரைலர் 2


;