கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலும், சுபாஷ்கரன் அல்லிராஜாவின் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. கமல்ஹாசன் திரைக்கதை, வசனம் எழுத, மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. ஒரு இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் இணைந்துள்ளார் இளையராஜா. குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ள ‘சபாஷ் நாயுடு’விற்கான கம்போசிங் பணிகளை துவங்கி விட்டார் இசைஞானி இளையராஜா. கமல்ஹாசனுடன் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் சித்திக், ஆனந்த் மகாதேவன், ஏ.ஆர்.ரஹ்மானின் ‘பாம்பே ட்ரீம்ஸ்’ இசை நாடகத்தில் நடித்த மனு நாராயணன், தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம், ஹிந்தி நடிகர் சௌரப் சுக்லா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு லாஸ் ஏஞ்லசிலும், மீதி 20 சதவிகித படப்ப்பிடிபு இந்தியாவிலும் நடைபெறவிருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி...
இப்போது அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் ஃபேவரிட் பாடகராக விளங்கி வருபவர் சித்...