தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிப் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். தமிழில் சூர்யாவுடன் எஸ்3, தனது அப்பா கமலுடன் ‘சபாஷ் நாயுடு’, தெலுங்கில் ‘பிரேமம்’ ரீமேக், ஹிந்தியில் ‘யாரா’ என ஒரே நேரத்தில் 4 படங்களை தற்போது கையில் வைத்திருக்கிறார் ஸ்ருதி. லேட்டஸ்ட்டாக மேலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறாராம் கமல் வாரிசு.
எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் பவன் கல்யாணை நாயகனாக வைத்து இயக்கவிருக்கும் படத்திற்கு சமீபத்தில் பூஜை நடைபெற்றது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, அனுப் ரூபன் இசையமைக்க இருக்கும் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். ஏற்கெனவே பவன் கல்யாணுடன் ‘கப்பார் சிங்’ படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ருதி.
உலகெங்கிலும் எராளமான ரசிகர்களை கவர்ந்த அனிமேஷன் படம் ‘‘ஃப்ரோஸன்’. 2013-ல் உலகமெங்கும் வெளியாகி வசூல்...
எஸ்.பி.ஜனநாதன இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்கும் படம் ‘லாபம்’. . விஜய்...
‘ஒரு நாள் கூத்து’ படப் புகழ் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர்,...