கமலை தொடர்ந்து விஜய்சேதுபதி பாராட்டிய படம்!

கமலை தொடர்ந்து விஜய்சேதுபதி பாராட்டிய படம்!

செய்திகள் 18-May-2016 10:47 AM IST VRC கருத்துக்கள்

அப்பாஸ் அக்பர் இயக்கி வரும் படம் ‘சென்னை 2 சிங்கப்பூர்’. ஜிப்ரான் இசை அமைக்கும் இப்படத்தின் பாடல்களை 6 நாடுகளுக்குச் சென்று ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர்.இந்த முயற்சியை ஏற்கெனவே உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்டியுள்ள நிலையில் இப்போது இப்படக் குழுவினரை நடிகர் விஜய்சேதுபதியும் பாராட்டியுள்ளார். ‘‘என்னுடைய நண்பர் இசை அமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைக்கும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படப் பாடல்களை வெளிநாடுகளில் வெளியிடவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ஜிப்ரான் மற்றும் இப்படக்குழுவினரின் இந்த புதிய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்’’ என்று கூறி இருக்கிறார் விஜய்சேதுபதி. கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் முதலானோர் நடிக்கும் இப்படம் இந்தியா, சிங்கப்பூர் நாடுகளில் வளர்ந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;