காமெடியனாக ஜெயித்த சந்தானம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் மூலம் ஹீரோவாக மாறினார். இப்படத்தை தயாரித்தது சந்தானத்தின் ‘ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம். அதனைத் தொடர்ந்து இந்நிறுவனம் தயாரித்த இன்னொரு படமான ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் சந்தானமே ஹீரோ. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு தற்போது மேலும் 2 படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் சந்தானம். அதில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை கெனன்யா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ‘தில்லுக்கு துட்டு’ படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் உருவாகிவரும் ‘தில்லுக்கு துட்டு’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக புதுமுகம் ஷனன்யா நடிக்கிறார். படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் இப்படத்தின் டீஸர் நாளை யு டியூப் மற்றும் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் ஹீரோவாக நடிக்கும் முதல் ஹாரர் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு காமெடியனாக ஹாரர் படங்களில் சந்தானம் நடித்துள்ளார்.
‘தில்லுக்கு துட்டு’ படத்திற்கு தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு செய்ய, தமன் எஸ்எஸ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு கோபிகிருஷ்ணா.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் கண்ணனின்...
இந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’, ’டகால்டி’...
இந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 2 படங்கள் வெளியாகும் சூழ்நிலை...