‘தெறி’யை தொடர்ந்து மனிதன்!

‘தெறி’யை தொடர்ந்து மனிதன்!

செய்திகள் 17-May-2016 3:29 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் தனியார் பேருந்து ஒன்றில் ‘தெறி’ திரைப்படம் ஒளிபரப்பிய சம்பவம் தொடர்பாக நடிகர் விஷால் எடுத்த அதிரடி நடவடிக்கை போல் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்று இரவு அவினாசியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றில் சமீபத்தில் வெளியான ‘மனிதன்’ திரைப்படம் ஒளிபரப்புவதை பயணி ஒருவர் நடிகர் சங்க பொது செயலாளர் விஷாலுக்கு தெரியப்படுத்தினார். இதனை தொடர்ந்து விஷால் மற்றும் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி ஆகியோரின் புகாரின் அடிப்படையில் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமன் மேற்பார்வையில் வீடியோ பைரஸி காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜெயலட்சுமி IPS-ன் உத்தரவின்படி, காவல்துறை ஆய்வாளர்கள் மகேந்திரன், நந்தகுமார் ஆகியோர் இன்று காலை மதுரவாயலுக்கு விரைந்து சென்று அந்த பஸ்ஸை மடக்கி பிடித்து அயனாவரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் சங்கத்திற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் தனியார் பஸ்ஸில் புதிய படம் ஒளிபரப்புவதை பிடிக்கபடுவது இது இரண்டாவது முறையாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;