250 கோடி வசூல் : ‘வாவ்’ சொல்ல வைத்த ஜங்கிள் புக்!

250 கோடி வசூல் : ‘வாவ்’ சொல்ல வைத்த ஜங்கிள் புக்!

செய்திகள் 17-May-2016 12:42 PM IST Chandru கருத்துக்கள்

இந்தியாவில் இப்படி ஒரு வசூல் கிடைக்குமென ‘ஜங்கிள் புக்’ படத்தை தயாரித்த வால்ட் டிஸ்னி நிறுவனமே நினைத்துப் பார்த்திருக்காது. அந்தளவுக்கு இந்தியாவில் வசூல் வேட்டையாடி தியேட்டர்காரர்களை ‘வாவ்’ சொல்ல வைத்துள்ளது இப்படம். கோடை விடுமுறையை முன்னிட்டு, ஏப்ரல் 8ஆம் தேதி வெளியான இப்படம் இந்தியாவின் பல தியேட்டர்களில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ‘ஜங்கிள் புக்’ ரிலீஸாகி 40 நாட்களை எட்டியிருக்கும் சூழ்நிலையில், தோராயமாக 250 கோடிகளை வசூலித்திருக்கும் என்கிறது பாலிவுட் டிரேட் வட்டாரங்கள். இன்னும் கோடைமுறை இரண்டு வார காலம் எஞ்சியிருப்பதால், வரும் நாட்களில் இப்படத்தின் வசூலில் முன்னேற்றம் இருக்கும் என்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்த 300 கோடிகளை இந்தியாவில் மட்டுமே இப்படம் வசூல் செய்யும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;