‘மருது’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

‘மருது’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

கட்டுரை 17-May-2016 12:26 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழக தேர்தல் முடிந்து தற்போது மீண்டும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் படங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அந்த வகையில், வரும் 20ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது விஷாலின் ‘மருது’. ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சூரி, ஸ்டுடியோ 9 சுரேஷ், ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை பார்க்கத் தூண்டும் 5 முக்கியமான விஷயங்களைப் பற்றிய இங்கே பார்க்கலாம்...

1. கிராமத்திற்கென்றே பெயர்போன தமிழ் மண்ணில், ஒவ்வொரு வாரமும் சிட்டி சம்பந்தப்பட்ட கதைகளாக வந்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு சற்று சலிப்பான விஷயமே. ஆனால், ‘மருது’ முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் மண்வாசனை மாறாத படம். சென்டிமென்டிற்கும், ஆக்ஷன் காட்சிகளுக்கும் பெயர்போன இயக்குனர் முத்தையா, குட்டிப்புலி, கொம்பன் படங்களுக்குப் பிறகு இந்த ‘மருது’வை இயக்கியிருக்கிறார்.

2. முத்தையா இயக்கிய முதல் படமான ‘குட்டிப்புலி’க்கு விமர்சனங்கள் இருவேறாக இருந்தபோதும், பி அன்ட் சி திரையரங்குகளில் பெரிய வசூலைக் குவித்தது. அதேபோல், கார்த்தி நடித்த ‘கொம்பன்’ படத்திற்கு விமர்சனமும், வசூலும் பெரிதாக இருந்ததால், அப்படத்திற்குப் பிறகு முத்தையா இயக்கத்தில் வெளிவரும் படம் என்பது ‘மருது’வுக்கு ப்ளஸ்.

3. ஒருபுறம் படங்களில் நடித்துக்கொண்டே மறுபுறம் நடிகர் சங்கப் பணிகளிலும் பிஸியாக இருக்கிறார் விஷால். அதுமட்டுமின்றி ‘மருது’ பட படப்பிடிப்பு சமயத்தில், விவசாயி ஒருவருக்கு அவர் செய்த உதவி, மக்களிடம் அவருக்கான செல்வாக்கை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் விஷால் நடித்த ‘மருது’ பட்டி, தொட்டிகளில் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

4. கிராமத்துப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள படத்திற்கு இமான் இசையென்றால் சொல்லவே வேண்டாம், ‘குத்துப்பாடல்’களில் பின்னி பெடலெடுத்திருப்பார். ‘மருது’விலும் 2 குத்துப்பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. காட்சிகளுடன் பார்க்கும்போது இந்தப் பாடல்கள் மேலும் உற்சாகத்தைத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5. பொதுவாகவே முத்தையா படங்களில் உறவுமுறைகளுக்கிடையே இருக்கும் பாசப் பிணைப்பு அருமையாக காட்டப்படும். குட்டிப்புலியில் அம்மா - மகன் பாசம், கொம்பனில் மாமனார் - மருமகன் பாசம் ஆகியவற்றைத் தொடர்ந்து, விஷாலின் ‘மருது’ படத்தில் பாட்டி ஒருவருக்கும், இளைஞன் ஒருவனுக்குமான பாசத்தைப் பற்றி படமாக்கியிருக்கிறாராம் முத்தையா. நிச்சயமாக ரசிகர்களின் கண்களை குளமாக்கும் வகையில் இப்படத்தின் சென்டிமென்ட் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;